Monday, September 17, 2018

"காத்திருப்பு போராட்டம்"
               17/09/2018

கோவை PGM அலுவலகத்தில் 17/09/2018 காலை முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கு 2மாத சம்பள பாக்கியை உடனே வழங்க கோரி

NFTE ...TMTCLU  மற்றும் BSNLEU சங்கங்கள் இணைந்து நடத்தும்  காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
BSNLEU  வின் மாநிலச்செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன். மாவட்டச்செயலர் தோழர்  ராஜேந்திரன் மற்றும் நமது NFTE சம்மேளன சிறப்பு அழைப்பாளர் A செம்மல் அமுதம்,  மாவட்ட செயலாளர் தோழர் ராபர்ட்,  மாவட்ட உதவி செயலர் தோழர் பாலசுப்பிரமணியன், TMTCLU மாவட்ட நிர்வாகி தோழர் ரவி, மாவட்ட செயலாளர் தோழர் தம்புதுரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பரையாற்றினர்.
மாவட்டம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட ஓப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 மாலை 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக வந்த தகவல் உண்மையே...
ஆனால் அது Repair and Maintenance A/C ன் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.

House Keeping காக கோரப்பட்ட 11கோடியே 70 லட்சம் ரூபாயில் தமிழக த்திற்கு எந்த பணமும் இதுவரை வந்து சேரவில்லை.

Repair and Maintenance Head  ல் வந்த பணத்தில்  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் நிர்வாகம் வழங்குமா என்பது கேள்விக்குரியே..?

நாளை 18/09/2018 NFTE & TMTCL  மாநிலச்செயலர் கள் BSNLEU உடன் இணைந்து மாநில நிர்வாகத்தை சந்தித்த பின்னர் தான் ....

ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பள பட்டுவாடா குறித்த தெளிவான நிலை என்ன என்று தெரியும்.

எனவே மாநிலச்சங்கங்களின் அறைகூவலுக்கு ஏற்ப காத்திருப்பு போராட்டம் நாளையும (18/09/2018) தொடர்கிறது கோவையில்...

வாழ்த்துக்களுடன்
தோழமையுள்ள
A ராபர்டஸ்
மாவட்ட செயலாளர்





No comments:

Post a Comment