Sunday, December 2, 2018

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்
ஒரு வார காலம் - ஒத்தி வைப்பு



02-12-2018 இன்று., DOT செயலருடன் அனைத்து சங்கத்தலைவர்கள் (AUAB தலைவர்கள்) நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 03-12-2018 முதல் துவங்க இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் ஒரு வார காலம் ஒத்திவைக்கப்பட்டு., 10-12-2018 முதல் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

நாளை 03-12-2018 அன்று காலை 10-00 மணிக்கு நமது மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா அவர்கள் உடன் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதால்., நமது காலவரையற்ற வேலை நிறுத்தம் டிசம்பர் 10-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை விபரம்:

02-12-2018 இன்று மதியம் 12-00 மணிக்கு நமது CMD உடன்., அனைத்து சங்கத் தலைவர்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. DOT சில கோரிக்கைகளின் மீது சாதகமான நிலைபாடு எடுத்திருப்பதாகவும்., அதனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தை விளக்கிக் கொள்ளுமாறும் நமது CMD அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். ஆனால்., DOT-யிடம் இருந்து எழுத்துப்பூர்வமான உறுதிமொழிகள் இல்லாமல் போராட்டத்தை விலக்கிக் கொள்ள இயலாது என AUAB தலைவர்கள் தெளிவுபட எடுத்துரைத்தனர்.

CMD-யுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்., DOT செயலர்., கூடுதல் செயலர் மற்றும் DOT-யின் மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இப் பேச்சுவார்த்தையில்., BSNL-க்கு 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு., ஓய்வூதியப் பங்களிப்பை முறைப்படுத்துதல் மற்றும் 01-01-2017 முதல் ஓய்வூதியத் திருத்தம் ஆகிய கோரிக்கைகள் சாதகமாகப் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக DOT செயலர் உறுதி அளித்தார்.

இருப்பினும்., முக்கியக் கோரிக்கையான 15% சத ஊதிய உயர்வு அளிப்பது பற்றி., ஊழியர் சங்கங்களுடனான பேச்சுவார்த்தையை முழுமைப் படுத்துமாறு BSNL CMD-ஐ., DOT செயலர் கேட்டுக் கொண்டுள்ளார். ஊழியர்களைப் போலவே அதிகாரிகளுக்கும் ஊதிய உயர்வு அளிப்பது பற்றிய DPE வழிகாட்டுதல் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும்., இது பற்றி தொலைத்தொடர்பு அமைச்சருடன் AUAB அனைத்து சங்க கூட்டமைப்பு விவாதிப்பதற்கு 03-12-2018 அன்று கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்ட முன்னேற்றங்களின் அடிப்படையில்., 03-12-2018 முதல் துவங்க இருந்த நாடுதழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம் 10-12-2018-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நமது இறுதிக்கட்டப் போராட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதும் ஊழியர்களும்., அதிகாரிகளும்., ஒப்பந்த ஊழியர்களும்., ஓய்வு பெற்ற தோழர்களும் மிகவும் உற்சாகமாக காத்திருந்தனர்.

ஆயினும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் அடிப்படையில்., நமது அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சரியான நிலைபாட்டினை எடுத்து போராட்டத்தினை ஒருவார காலத்திற்கு தள்ளி வைத்துள்ளது பாராட்டுக்குரியது.

நாளைய பேச்சுவார்த்தையில்.,
நமது முக்கிய கோரிக்கையான ஊதிய மாற்றம்
ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால்...?
மேலும்., முழு வீச்சுடன்...! மேலும்., முழு மூச்சுடன்...!
மேலும்., உரத்தக் கோபத்துடன்...!
2018 டிசம்பர் 10 முதல் களம் காண்போம்...!
நமது உரிமையை வெல்வோம்...!
காத்திருப்போம் தோழர்களே...!
காலமும்...! களமும்...!
காத்திருக்கிறது...!

தோழமையுடன்...
A ராபர்ட்ஸ், மாவட்ட செயலர் NFTE-BSNL.,
& தலைவர்- AUAB.,
          கோவை SSA

No comments:

Post a Comment