Thursday, May 16, 2019

         
இளைஞர் எழுச்சி நாள் மே 17.
           கனவு காணுங்கள், அந்தக் கனவு உறக்கத்தில் வரும் கனவாக இருக்கக் கூடாது. உறக்கத்தை விரட்டும் கனவாக இருக்க வேண்டும்' என தன்னம்பிக்கையை இந்திய இளைஞர்களுக்கு  மனதில் விதைத்து வாழ்ந்துகாட்டிய, இந்தியாவின் ஏவுகணை நாயகன்’, 'அணுசக்தி நாயகன்', 'தலைசிறந்த விஞ்ஞானி', 'இளைஞர்களின் எழுச்சி நாயகன்' என்றும் போற்றப்படும் பன்முகத் தலைவர் 'பாரத ரத்னா’'' டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினம்  இளைஞர்களின் எழுச்சி தினமாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.
            தமிழக தொலைத்தொடர்பு ஊழியர்களைப் பொறுத்த வரையில்
நமது மாநிலச் சங்கத்தின் வழிகாட்டல் அடிப்படையில் தோழர் ஜெகனின் பிறந்த நாளை இளைஞர் தினமாக நாம்   கொண்டாடுகிறோம். ஜெகன் என்று சொல்லும்போது அந்த சொல் ஒரு மந்திரச் சொல்லாக பெரும்பான்மைத் தோழர்களின்  உணர்வில் கலந்திருக்கிறது. இன்றைக்கு தோழர் ஜெகனின் லட்சியங்களை நமது இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது நமது தலையாய கடமையாகும்.
பல நூறு உறுப்பினர்கள் மாதந்தோறும் ஒய்வு பெற்றாலும்,  இன்றும் இவ்வளவு போர்க்குணம் மிக்க, கொள்கைப்பிடிப்புள்ள இயக்கமாக செயல்படுவதற்கு தோழர் ஜெகன் அவர்களின் அயரா உழைப்பும் , அவர் அளித்த அன்பும் தோழமையும் தான் அடித்தளமாக உள்ளது.

             இன்றைக்கு பல தலைவர்கள் ஜெகனைப் போல் இளைஞர்களை நம் இயக்கத்தின் பால் ஈர்க்கும் வகையில் செயலாற்றிவருகின்றனர்.  தொலை தொடர்பு தொழிலாளியின் துயர் துடைத்த மாமனிதன் தோழர் ஜெகன். பொறுமையும், சகிப்புத் தன்மையும், போர்க்குணமும், சக தோழரிடம், தொழிற்சங்கத்திடம்,   பழகும் பாங்கும், நேர்மையான அரசியலும் தோழர் ஜெகனின் வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடமாகும். நாம் எவ்வளவு வளர்ந்து விட்டதாக கருதினாலும் அவரின் வாழ்க்கையில் இருந்து இன்னும் நிறைய கற்றுத் தேற வேண்டியிருக்கிறது  என்பதை உணர்வோம், ஒப்புக் கொள்வோம்.
           ஜெகனால் துவக்கப்பட்டு, ஜெகனால் வழிநடத்தப்பட்ட சங்கம் ஒப்பந்த தொழிளார் சங்கம். இன்றைய சூழலில் மிகுந்த பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்களே. அவர்கள் துயர் துடைக்க, துன்பம் தீர, குறித்த காலத்தில் மாதந்தோறும் சம்பளம் பெற்றிட கடும் களப் பணியாற்றிட  இந்த நாளில் சபதமேற்போம்.
            தோழர் ஜெகனின் நினைவுகள்  நமக்கு மாறாத உற்சாகத்தையும்  தெம்பையும் அளித்த காலம் நிழலாடுகிறது.     
            தோழமை உணர்வு,மனித நேயம், அன்புள்ளம், அனைத்தும் ஒருங்கே அமைந்த மாமனிதன் தோழர் ஜெகனின் பிறந்த நாள்  மே 17 , இந்த வருடமும் தமிழகமெங்கும் அனைத்து மாவட்ட , கிளைச் சங்கங்கள், இளைஞர் எழுச்சி நாளாக சிறப்புடன் கொண்டாடிவோம்.

          "மாற்றங்களிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டால் நாம் நிச்சயம் மேலும் வளர முடியும்."  என்று சொன்ன நம் தலைவர் தோழர் ஜெகன். தொழிற்சங்க நடைமுறையில்
புதிய இலக்கணம் படைத்தவர் இலக்கணம் மாறாமல் இயக்கம் வளர்த்து, இயக்கத்தை இலக்கியமாக செதுக்கிய சிற்பி தோழர் ஜெகன்.

          எந்த விதமான முன் முடிவும் இன்றி பிரச்சினைகளை அணுகி தீர்வு கானல், ஒளிவு மறைவற்ற வெளிப்படைத்தன்மை, தொழிலாளர் நலன் ,  தொழிற்சங்க வளர்ச்சி ஒன்றையே லட்சியமாக கொண்டு வாழ்ந்து காட்டிய தகைமை சால் தலைவர் தோழர் ஜெகன். அவர் பிறந்த நாளில் அவர் காட்டிய பாதையில் செம்மாந்து பயணிப்போம்.

          "லட்சியங்கள்தான் நம்மை வழி நடத்தும்." என்றார் தோழர் ஜெகன்.  உயரிய லட்சியங்களை உள்ளத்தில் இருத்தி, உழைப்பவர் வாழ்வு சிறக்க, தோழர்ஜெகன் வழியில் தொடர்ந்து பணியாற்றிடுவோம்.
           வாழ்த்துக்களுடன்.
        
           தோழர் A . ராபர்ட்ஸ்
           மாமாவட்ட செயலர்




No comments:

Post a Comment