Monday, December 17, 2018

BSNL காக்க 

வங்கியில் கடன் பெற முன்முயற்சி 

NFTE BSNL


அன்பிற்கினிய தோழர் C சந்தேஸ்வர் சிங் ஜீ

தங்களது தொடர் முயற்சியால்  EB Bill, ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பள பில் ஆகியவற்றிக்கு தமிழ் மாநிலத்திற்கு ஒரளவு நிதி ஒதுக்கீடு  பெற்றுத் தந்துள்ளீர்கள். தமிழக NFTE BSNL  மாநிலச் சங்கம் தனது நன்றியை உரித்தாக்குகிறது.

இது குறித்து மேலும் சில கருத்துக்களை தங்கள் கவனத்திற்கு கொணர விழைகிறேன்.

தற்போது BSNL ஆகப்பெரிய நிதிநெருக்கடியை சந்தித்து வருகிறது. எல்லா மாநிலங்களிலும் EB Bill இரண்டு மூன்று மாதங்களாக கட்ட இயலாது தவிக்கிறோம்.. பல இடங்களில் BTS Tower, தொலைபேசி நிலையங்கள் எல்லாம் EB சப்ளை இல்லாமல்  முடங்கி உள்ளது...

ஊழியர்களின் பல்வேறு claims நிலுவையில் உள்ளது. குறிப்பாக பணியில் இருப்போர் ஒய்வு பெற்றோர் அனைவரின் மருத்துவ பில்கள் In patient and with voucher  போன்றவைகள் நிதி  ஒதுக்கீடு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

GPF  withdrawal குறித்த காலத்தில்  வழங்கப்படுவதில்லை.. சம்பளத்தில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட அவர்களின் பங்களிப்பு GPF , EPF கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை.

கூட்டுறவு சங்த்திற்காக ஊழியர்கள் சம்பளத்தில் பிடித்த தொகை Society க்கு செலுத்தப்படவில்லை.  இதனால் ஊழியர்கள் Defaulter களாக கருதப்பட்டு அடுத்த கடன் பெறுவதில் சிக்கலும் , சம்பளத்தில் பிடித்த ஆனால் நிர்வாகம் செலுத்தாமல் விட்டதால் அபராத வட்டியும்  ஊழியர்கள் செலுத்த வேண்டியுள்ளது.

வங்கி லோன் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் வஙகிக்கு பணம் அனுப்பப்படவில்லை.  தனிநபரின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாவதுடன், அபராத வட்டி ஊழியரால் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
CIBIL  மதிப்பெண் கணிசமாக குறைந்து தேவைக்கு வேறு எங்கும் எப்போதும் கடன் வாங்க முடியாத நிலைக்கு ஊழியர்கள் தள்ளப்படட்டுள்ளனர்.

மிகக்குறைந்த கூழிவாங்கும் ஒபபந்த ஊழியர்களுக்கும் 2, 3  மாத சம்பளம் பாக்கி வைக்கப்படும்  நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்களின் அன்றாட வாழ்வு கேள்வி குறியாகியுள்ளது.


இந்த சூழலில்  மத்திய சங்கம் உடனடியாக தலையிட்டு தேசிய வங்கிகளிடமிருந்து BSNL கடன்பெற DOT யிடம்  ஒப்புதல் பெற்றுத்தர அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். 

நமது தோழமைச் சங்கங்களுடன் இணைந்து அல்லது AUAB யின்  மூலம் BSNL க்கு நிதி வழங்க கோரி சஞ்சார் பவன முன் ஆர்ப்பாட்டம் தர்ணா உள்ளிட்ட போராட்டங்களையும்  நாடு முழுவதும் நடத்திட NFTE தமிழ் மாநில சங்கம் வலியுறுத்துகிறது. 
வாழ்த்துக்களுடன்

தோழமையுள்ள
k நடராஜன்
மாநில செயலர்.
தமிழ் நாடு.

மாநில செயவரின் முயற்சிக்கு கோவை மாவட்ட சங்கம் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது

A ராபர்டஸ்
மாவட்ட செயலாளர்
NFTE BSNL


No comments:

Post a Comment