Tuesday, December 25, 2018


டிசம்பர் 25 – கீழ்வெண்மணி நினைவு தினத்தில் சூளுரைப்போம்!

சாதி தீண்டாமையை சுட்டுப் பொசுக்குவோம் !
உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம் !

நன்றி: சேலம் NFTE BSNL. வலைத்தளம்

கேட்டது......!

"அரைப்படி" தான் என்றாலும் அது நெல் அல்ல...!
ஆதிக்கத்தை அசைத்துப் பார்த்த சொல்...!
சேறுகளிலும்...! சேரிகளிலும்...! உழன்றவர்கள்...!
வர்க்கமாய் திரண்ட போது தான்...!
அது நிகழ்த்தப்பட்டது...!

44 உயிர்கள் என்பது உங்களுக்கு வேண்டுமானால்...!
டிசம்பர் குளிருக்கு விறகுகளாய்த் தெரிந்திருக்கலாம்...!
மூடர்களே..........! எரிக்கப்பட்ட..........!
அந்த...! உயிர்களிலிருந்துதான்., பிறந்து கொண்டே இருக்கிறது.
உரிமைக்கான சிறகுகள்...! 50 ஆண்டுகள் கடந்த பின்பும்...!

அடித்தால் திருப்பி அடி...!
அடக்கினால் அடங்க மறு...!
வாடி என்றால் போடா என்று சொல்...!
ஏண்டி என்றால் ஏண்டா என்றே சொல்...!
சாதி என்றால் மோதி நட...!

உழுபவனுக்கே நிலம் சொந்தம்., 
உழைப்பவனுக்கே அதிகாரம்...!
என்று முழங்கினார்...! தோழர். பி.எஸ்.ஆர்...!

பார்பன., சூத்திர பண்ணைகளால் 
ஏங்கிக் கிடந்த கழனி...!
எங்கும் செங்கொடி துளிர்த்தது., 
சேற்றில் நடுங்கிய கைகளில்...!
ஒரு சிவப்பு திமிர் முளைத்தது...!

காங்கிரஸ்...! பண்ணைகளும்...!
நீதிகட்சி...! பண்ணைகளும்...!
மிரண்டன...!

ஏழைக் கூலி விவசாயியின் 
சுயமரியாதைக்காக
எந்த ஒரு 
 
திராவிட இயக்கமும் வரிந்து கட்டி
அவர்களுக்காக நிற்கவில்லை...!

பட்டியல்...! விவசாயிக்காகவும் 
பட்டியலின......!
பாதுகாவலர்களும் - ஓர் இயக்கம்
கூட...! கண்டதில்லை...!

எதிர்த்துக் கேட்கக்கூட ஆள் இல்லாமல்
நாதியற்று இருந்த நிலையில்தான் கர்னாடக மாநிலத்தில்
பி.சீனிவாசராவ்...! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
தேசிய குழுவின் முடிவை மகிழ்ச்சியுடன்
ஏற்றுக் கொண்டு தஞ்சை டெல்ட்டாவுக்கு
வந்தார்...! எங்கோ பிறந்து எங்கெங்கோ சென்று
போராடிய தோழர் சேகுவாரைப் போல
நெஞ்சில் உறுதியுடன் வந்தார்.

களப்பால் குப்பு., சிவராமன்., வாட்டாக்குடி இரணியன்.,
ஆம்பலாபட்டு ஆறுமுகம் போன்ற நெஞ்சுரம் மிக்க
தலைவர்களையும் உருவாக்கி - 
தலைவர்களின்
தலைவராகவும்...! தொழிலாளர்களின்...!
தொழிலாளராகவும் 
 விளங்கினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடும் நெருக்கடி, கட்டுப்பாடு சமயத்தில்
கூட., 1952 -இல் நடந்த தேர்தலில், வெளியில் வந்து பிரச்சாரம் செய்ய
   
  
 
முடியாத சூழ்நிலையிலும் மக்களோடு மக்களாக வாக்குகள் சேகரித்து
கீழ்த் தஞ்சை (நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள்) யில் மட்டுமே
9 சட்டமன்ற தொகுதிகளில் "தனித்து" வெற்றி கண்டதும்...!
இந்த மாபெரும் தியாகி...!
பி. சீனிவாசராவ் அவர்களால் தான்...!

மிகப்பெரிய கொடுமையான
சாணிப்பால்...! சவுக்கடிக்கு
சாவுமணி அடித்தவரும்
இவர் தான்...!

சுகந்தை என்றும்., 
அமிஞ்சி என்றும்., 
 
சாணான் என்றும்.,
வளையன் என்றும்.,
 
எடையன் என்றும்., 
 
பள்ளுபற
என்றும்., 
 
குற்றப்பரம்பரைக் 
 
காரன் 
 
என்றும்.,
பழிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தை...!

அதே ஊரில்...!
பழித்த நாக்குகளாலேயே
தோழர்...! என்று நிமிர வைத்தது
மாவீரன்...! பி.எஸ்.ஆர் தானே...!

நிலப்பிரபுத்துவ...!
சாதிய கொடுமைகளுக்கு...!
எதிராக...!
செங்கொடி இயக்கம்...!
நடத்திய...! வர்க்கப் போராட்டத்தில்...!
வீரச்சமரில்...! 
உயிர் நீத்த தியாகிகளுக்கு...!
நமது வீர வணக்கம்......!
வெண்மணி தியாகிகளின்......!
நினைவினைப் போற்றுவோம்......!




No comments:

Post a Comment