Friday, November 16, 2018

NFTE BSNL & TMTCLU  சங்கங்கள் , நிர்வாகம், ஒப்பந்ததாரர்கள் அடங்கிய முத்தரப்பு  கூட்டம் 17/11/2018 காலை 1100 மணியளவில் நடைபெறும்..

போனஸ், பிரதிமாதம் 07ம் தேதிக்குள் சம்பள பட்டுவாடா, EPF , UAN எண், ESI Family Card வழங்குதல்  போன்ற பிரச்சினைகள் தீர்வை நோக்கி நகரும் என்ற நம்பிக்கையுடன் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வோம்.

Thursday, November 15, 2018

14/11/2018 பேரணியின் நிகழ்வுகள்

Wednesday, November 14, 2018


*தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா வுடன் இன்று சந்திப்பு*
பெங்களூர் வந்துள்ள அமைச்சரை நமது NFTE துணைப் பொதுச்செயலாளர் தோழர் சேஷாத்திரி  அவர்கள் தலைமையில் கர்ணாடக AUAB தலைவர்கள் இன்று காலை 1200 மணியளவில் சந்தித்து,அமைச்சரின் உறுதிமொழிக்கு எதிரான DOT யின் தற்போதைய செயல்பாடுகளை விளக்கி 3rd PRC உடனடியாக  அமுல்படுத்த தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளனர்.

03.12.2018 முதல் காலவரையற்ற் வேலை நிறுத்தம்- 03/12/2018 முதல்

03.12.2018 முதல் காலவரையற்ற் வேலை நிறுத்தம்- AUAB அறைகூவல்
அன்பார்ந்த தோழர்களே,
14.11.2018 அன்று புது டெல்லியில் கூடிய AUAB கூட்டத்தில் ஊதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் இதர பிரச்சனைகளை நிறைவேற்றக் கோரி 03.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.  அதே போல 03.12.2018 முதல் அரசின் திட்டங்களான NOFN, NFS மற்றும் LWE ஆகிய திட்டங்களையும் புறக்கணிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  எனவே நமது நியாயமான உரிமையான ஊதிய மாற்றத்தை வென்றடையவும், உயிரினும் இனிய BSNL நிறுவனத்தை பாதுகாப்பதற்கும் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராவோம்.  03.12.2018லிருந்து கால வரையற்ற வேலைநிறுத்தம்.  இது ஒன்றே நமது; கோரிக்கைகளை வென்றடையச் செய்யும்.
நமது ஒன்றுபட்ட சக்தியினை  அரசுக்கு உணர வைப்போம்.  நமது கோரிக்கையினை வென்றடைவோம்.நாடுதழுவிய_பேரணி

இன்று  கோவையில் மாலை  0330 மணியளவில் துவங்கி பிரம்மாண்டமான ஊர்வலம் மத்திய தொலைபேசி நிலையத்தில் இருந்து புறப்பட்டு CTO, Commissioner office, நீதி மன்றம், KG Theater, IncomeTax அலுவலகம் வழியாக,  ரேஸ்கோர்ஸ்ல் உள்ள DTAX தொலைபேசி நிலையம் வந்து சேர்ந்தது. 500க்கும்  மேற்பட்ட தோழர்கள் தோழியர்களும்  கலந்து கொண்டனர்.
ஊர்வல முடிவில்  கோவை மாவட்ட AUAB யின் தலைவர் தோழர் ராபர்ட்ஸ தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
AUAB கன்வீனர் தோழர் C ராஜேந்திரன் அவர்கள மற்றும்  தோழர் பிரசன்னா SNEA மாவட்ட செயலாளர் துவக்கவுரை நிகழ்த்தினர்.

தோழர் A செம்மல் அமுதம் NFTE CHQ , தோழர் பாபு ராதாகிருஷ்ணன் மாநில செயலாளர் BSNLEU அவர்களும் சிறப்புரையாற்றினர்.

தோழர் வனராஜ் AIBSNLEA அவர்கள் நன்றியுரையாற்றினார்.

டிசம்பர் 3 முதல் 
#காலவரையற்ற_வேலைநிறுத்தம்  என்ற AUAB வின் அறைகூவலுடன். கூட்டம் நிறைவுற்றது.

Tuesday, November 13, 2018

பேரணியை
பெரு வெற்றி
பெறச் செய்வோம்


#AUAB
#NFTE_BSNL
14/11/2018 அன்று
நடைபெறும்
நாடுதளுவிய
#பேரணியை
#பெரு_வெற்றி
#பெறச்_செய்வோம்.

இன்று வரும் 
நாளை வரும் 
நம் மூன்றாவது 
சம்பள மாற்றம் என்று காத்திருந்தோம்
நம்பிக்கையுடன்...

"இன்று வருமோ நாளைக்கே வருமோ 
மற்று என்று வருமோ அறியேனே என்கோவே 
துன்று மல
வெம்மாயை யற்று 
வெளிக்குள் வெளி கடந்து காத்திருங்கள்" என்று சூசகமாய்
தொட்டுக்காட்டியள்ளது
DOTயின் கடிதம்.

இந்தியா முழுவதும்
இன்று நடைபெற உள்ள
#பேரணியில் BSNL ஊழியர்கள் அதிகாரிகள்
அனைவரும்
எழுச்சியுடன்
கலந்து கொண்டு
நம் எதிர்ப்பை பதிவு செய்வோம்.

வெகுண்டு எழுந்து
ஆர்ப்பரித்து போராடாது
அநீதி களைய முடியாது.

தொடர் 
போராட்டங்களுக்குத்
தயாராவோம்.

#இறுதி_வெற்றி_நமதே!
Monday, November 12, 2018

உரிமை பேரணி

நமது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா அவர்களுடன் 24-02-2018 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில்., 3-வது ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்., ஓய்வூதிய பங்கீடு., 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளில் ஏற்கப்பட்ட உடன்பாடுகளை நடைமுறைப் படுத்திடக் கோரி., நமது போராட்டத்தை தீவிரப் படுத்தும் விதமாக., பத்திரிக்கையார் சந்திப்பு மற்றும் தர்ணாப் போராட்டங்களைத் தொடர்ந்து., அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் பேரணி 14-11-2018 அன்று நடத்திட., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு - AUAB விடுத்த அறைகூவலை ஏற்று  கோவையில் 14/11/2018 அன்று மாலை 0300 மணியளவில் மத்திய தொலைபேசி நிலையத்தில் துவங்கி ரேஸ்கோர்ஸ் DTAX அலுவலகம் வரை மாபெறும் பேரணி நடைபெறும் தோழர்களும் தோழியர்களும் பெருந்திரளாக கலந்து போர்ப்படை பரணி பாடுவோம்.
வெற்றிப் பாதையில் பயணிப்போம்.

வாழ்த்துக்களுடன்தோழமையுள்ளA ராபர்ட்ஸதலைவர் AUAB