Tuesday, August 20, 2019

தேர்தல் பிரச்சார உலா

அன்பு தோழர்களே!
தோழியர்களே!!
இன்றை நாள் பிரச்சார பயணம் மாவட்ட சங்க முன்வாயிலாக உற்சாகமாக தொடங்கிய நமது சங்க தோழமை தோழர்கள்.

இரண்டாம் நாள்:
11 மணி.
RS புரம் Exge தோழர் VS அவர்களுடன் சங்க தேர்தல் பணிபற்றிய  நேர்காணலில்,சங்க தோழர்கள் அர்பணிபோடு செயல்பட்டதை பற்றிஅவர்
மெய்சிலி போனார்.
NFTE ன் வெற்றி! துல்லியமாக உருதி செய்யபட்டது என்று
அகமகிழ்தார்.
நன்றியோடு பயணம்
தொடர்ந்து----------

இரண்டாம் நாள்:
11:30 மணி.
PN புதூர் சென்றடைந்தோம்.
தோழர்கள் எதிர்பார்போடு காத்திருந்தனர்.அவர்களோடு அளவளாவி போது Bsnl நிலைகண்டு கடந்த காலம்(2004 முதல்2019 வரை)நிகழ்ந்த நிகழ்வுகளை நினைத்து (போனஸ்,மெடிக்கல்,பயணபடி,இன்னம்பிர
சலுகைகள்தடைசெய்யபட்டது )வேதனை யுற்று இனியும் வேண்டாம் இந்த நிலை அனுமதியோம்"NFTE யை வெற்றிடைய செய்வதே நோக்கமாக தோழர்கள் சூலுரைத்தனர்.
மனகிழ்ச்சியோடு
அடுத்த பயணம் தொடர்ந்து-----------
சந்தோஷ மழையில் நனைய தொடங்கியபோது உண்மையான வருணபவான் இயற்கையான மழையை நம்மீது எய்து சொட்ட சொட்ட 
நனைந்தபடி நமது பயணம்-------

இரண்டாம் நாள்:
12:30 மணி.
சாய்பாபா காலணி வந்தடைந்தது.இங்கு மதிய உணவு பின்னர்.
மதியம் 1:00 மணி.  தோழியர்களுடன் நேர்காணலில் பகிர்ந்து கொண்டபோது இங்கு கிளை செயலர் ஓய்வு பெற்று விட்டார்
 அவருக்கு பதிலாக ஏன் யாரையும் போடவில்லை என அன்புடன் கேட்டனர்
அதற்கான காரணத்தை விழக்கியபோது  அகம்மகிழ்ந்து அன்போடு தேர்தல் நிதியை கொடுத்து மகிழ்ச்சியடைய செய்தனர்.
அங்கு
பல தோழர்களை அன்போடு அனுகியபோது அவர்கள் கூறிய பதிலில் NFTE யின்
வெற்றியை யாராலும்,
எவராலும் தடுத்து நிருத்த முடியாது, உண்மை அனுபவவிப்பை
யாராலும் மறைக்கவும் முடியாது இதை கேட்ட
நமது தோழர்கள் நெகிழ்ந்து போனார்கள்!!!
நெகிழ்ச்சியோடு பயணம் தொடர்ந்து-------------

இண்டாம் நாள்:
மாலை 4:30 மணி.
PGM அலுவலகம் தோழர்கள் பிரபாகரன் CSC. ஓய்வு பெற்ற மிக அனுபவம் வாய்ந்த
தோழர் ஈசாக் TT அவர்கள் மற்றும் நமது தோழர்களோடு
மாற்று சங்க தோழர்களோடு ஏற்பட்ட நேர்காணலில் பலர் கூறியது. BSNL உருவாகியதிலிருந்து 
இன்று வரை
NFTE மட்டுமே இருந்திருந்தால் நமது
நிலை
இப்படி ஆகியிருக்குமா? இப்பவாவது  மக்களுக்கு புரியுமா?
எப்படியாவது  "சாரி" எங்க வோட்டோடு சேர்ந்து NFTE வெற்றி பெற்றே
தீரும் இதுவே காலத்தின் கட்டாயம்!
உண்மையின் உறைவிடம்!
வருங்கால சந்ததிளின் புகழிடம்.
மகிழ்ச்சியோடு பயணம் தொடர்ந்து------















No comments:

Post a Comment