Thursday, January 17, 2019

கோரிக்கைகள் தீர்க்கப்படாவிடில் மீண்டும் போராட்டம்...
 தொலைத்தொடர்பு அமைச்சருக்கு அனைத்து சங்க கூட்டம் கடிதம்...


 மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு மனோஷ் சின்ஹா அவர்களுக்கு இன்று 17.01.2019 தேதியிட்ட கடிதம் ஒன்றை அனைத்து சங்க கூட்டமைப்பு எழுதியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்ட விசயங்கள் என்னவெனில் ;

அனைத்து சங்க கூட்டமைப்பு 03.12.2018 முதலான காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டது எனவும் டெலிகாம் செயலருடன் 02.12.2018 அன்றும் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சருடன்03.12.2018 அன்று பேச்சு வார்த்தைகள் நடைபெற்றதாகவும். ஊதிய மாற்றம் வழங்குவது, BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வது , ஓய்வூதிய மாற்றத்தை திருத்தம் செய்வது , BSNL வழங்கும் ஓய்வூதிய பங்களிப்பின் மீது அரசு விதிகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் 2வது ஊதியமாற்றத்தில் விடுபட்ட பிரச்சினைகளை தீர்ப்பது ஆகிய அனைத்துசங்க கோரிக்கைகளை கவனிப்பது மற்றும் விரைந்து தீர்ப்பது குறித்து உறுதிமொழிகள் வங்கப்பட்டன எனவும்.

கோரிக்கைகள் மீதான தங்களது உறுதிமொழிகள் நிறைவேறுவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து கவனிப்பதற்கான அமைப்பு செயல்பாட்டில் உள்ளதை தங்களது கனிவான கவனத்திற்கு கொண்டுவருவதாகவும், தங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று ஒன்றரை மாதங்கள் கடந்த பின்பும் கோரிக்கைகள் தீர்விற்கான பயனுள்ள நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தொடர் நடவடிக்கைக்குழுவிற்கு தொலைத்தொடர்பு இலாகாவின் கூடுதல் செயலர் தான் தலைமை வகிக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கை ஏற்கப்படாமல் இணைச்செயலர்(நிர்வாகம்) அவர்களது தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு 10.01.2019 அன்று கூடிய பொழுது எங்களது எதிர்பார்ப்பு சரி என உணரப்பட்டது.  குழுவில் தொலைத்தொடர்பு இலாகா சார்பு தரப்பு கோரிக்கைகளின் தற்போதை நிலைமை குறித்த தகவல்கள் எதையும் வழங்கமுடியாமல் தவித்தது.

அதற்குப்பின் கூடுதல் செயலரை சந்தித்து குழுவின் செயல்பாடு மீது தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தியதாகவும் மேலும் அவருடன் தொடர்ந்து கோரிக்கைகள் குறித்து விவாதித்ததாகவும் அவரும் வரும் வாரத்தில் தங்களுடன் விவாதிப்பதாக உறுதியளித்திருந்தார் இருந்த போதிலும் கூடுதல் செயலர் பிசியாக இருப்பதால் அவருடன் இந்த வாரத்தில் கூட்டம் ஏதும் நடைபெறாது என சொல்லப்படுகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் நாங்கள் உறுதியாக குறிப்பிடுவது என்ன வெனில்  கோரிக்கைகளை தீர்ப்பதில் தொலைத்தொடர்பு இலாகாவிற்கு ஆர்வமில்லை எனவும் அவர்கள் காலத்தை செலவழிப்பதிலேயே கவனமாக இருப்பதால் அமைச்சரின் வேண்டு கோளுக்கிணங்க ஒத்தி வைக்கப்பட்ட காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் துவக்கிடும் நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment