TMTCLU சிறப்பு கூட்டம்
NFTE BSNL குடந்தை மாவட்ட செயலாளர் மற்றும் TMTCLU மாநில பொருளாருமான தோழர் M விஜய் ஆரோக்கியராஜ் அவர்கள் கலந்து கொண்ட கோவை மாவட்ட TMTCLU சிறப்புக்கூட்டம் கோவையில் 16/02/2019 அன்று மாலை 0500 மணியளவில் நடை பெற்றது. தோழர் ரவி அவர்கள் தலைமை தாங்கினார். தோழர் பாலசுப்பிரமணியம் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் ராஜா தம்புதுரை மாவட்ட செயலாளர் TMTCLU துவக்கவுரையில் கோவை மாவட்டத்தில் நிலவும் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினைகளை சுட்டி காட்டி TMTCLU வை மேலும் வலுவாக கட்டமைக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கினார்.
தோழர் விஜய் தனது சிறப்புரையில் மாநில மட்டத்தில் TMTCLU செயல்பாடுகள், EPF UNO எண் பெறும் வழி, அதில் உள்ள சிக்கல்கள் , ESI அட்டை, ஒப்பந்த ஊழியர் அடையாள அட்டை பெற வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார். குறைந்த பட்சம் ரூபாய்7000 போனஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி அதற்கான ஆலோசனைகள் வழங்கினார்.
குடந்தை தோழர் பாலகுரு, தோழர் A ராபர்ட்ஸ் , தோழர் A செம்மல் அமுதம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்டம் முழுவதும் இருந்து ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தோழர் அய்யாசாமி அவர்கள் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.










No comments:
Post a Comment