Monday, December 3, 2018

வீறுடன் காத்திருப்போம் களமிறங்க.
இறுதி வெற்றி நமதே!


#தோழர்_RK
#NFTE_BSNL


தோழர்களே!
தோழியர்களே!! வீராவேசமுடன் வேலை நிறுத்தத்தை எதிர்கொள்ள காத்திருந்தவர்களுக்கு போராட்டம் அடுத்த நாள் குறிப்பிடாமல் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பால் ஒத்திப்போடப்பட்டது மிகுந்த கோபத்தையே ஏற்படுத்தும்.

#இந்த_கோபம்_நியாயமானது_தான்.

 அதேசமயம் சந்திக்கவோ பேசவோ முடியாதென்ற நிலையை மாற்றி DOT அதிகாரிகள் மட்டுமின்றி அமைச்சரையும் நம்மோடு பேச வைத்தது அனைத்து சங்க ஒற்றுமை தான்.

 நாம் விரும்பும் முடிவு ஏற்படவில்லை என்பது உண்மைதான். அதேசமயம் மோசமான நிர்வாகத்தையும் நம் பக்கமே திரும்பாதிருந்த அமைச்சரையும் சற்று திரும்ப வைத்திருக்கிறோம் எனில் அதற்கு காரணம் நமது ஒற்றுமையே.

 அப்படியானால் அந்த ஒற்றுமையை கட்டிப்பாதுகாப்பதன் மூலமே அடுத்த கட்ட முன்னேற்றம் நோக்கி செல்லமுடியும். வேகமான ஒரு பகுதியினரின் முடிவு விடிவையோ முடிவையோ ஏற்படுத்தாது. மாறாக கோரிக்கையை வென்றடைவதற்கு அவசியத்தேவையான ஒற்றுமையில் விரிசலை ஏற்படுத்தும். ஊழியர்கள் மத்தியிலும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும். கட்டியிருக்கிற ஒற்றுமையை மேலும் பலப்படுத்தி உருக்கு போன்று காப்பதன் மூலமே ஒரு சேர சீறிப்பாய முடியும்.

 ஒருசிலரின் வேகமான பாய்ச்சலை விட ஒன்றாய் ஒருசேர நாம் வைக்கும் ஓரடி நகர்வுக்கு சக்தி அதிகம். அதுதான் அரசை சிந்திக்க வைக்கும். முடிவுகளில் மாறுபட்டோமானால் அது நாம் சந்திக்க வேண்டிய எதிர்தரப்புக்கே சாதகமாக முடியும்.

 நமது கோபக்கனல்  நீறு பூத்த நெருப்பாக இருக்கட்டும். ஒற்றுமை உடையாது காப்போம். நிர்வாகத்தின் அரசின் ஆணவம் உடைப்போம். சற்று பொறுப்பதாலும்  தாமதிப்பதாலும் தோற்றுவிட்டோம் என்பதல்ல. 

மாறாக இன்னும் வேகமாக ஆக்ரோஷமாக பேருருவாய் எழப்போகிறோம் என்பதில் திண்ணமாக இருப்போம். ஊர்கூடித் தோற்றதில்லை. போராடாமல் நாம் வென்றதுமில்லை. நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். எதற்காக . எல்லோரும் ஒருசேர சீறிப்பாய்வதற்கே. நமது கோபத்திற்கும் எரிமலையாய் வெடிக்கும் போர்க்குணத்திற்கும் தள்ளிப்போகும் நாட்கள் ஒருபோதும் தடையாக இருக்காது. நமது பொறுமை ஓய்வதற்கல்ல.

 அக்கினிக்குஞ்சுகளாய் ஆர்த்தெழுந்து முன்னிலும் வேகமாக மோதுவதற்கே. போர்ப்படையென சீற்றமுடன் இருப்போம். எத்துனை தடைவரினும் அவை நொறுக்கி வெற்றி காண்போம். நமது வெற்றி வெகு தொலைவில் இல்லை. நமது ஒன்று பட்ட ஆவேசம் ஆட்சியாளரை நிச்சயம் நம் பக்கம் திரும்பும். சிறிதே காத்திருப்போம் சீறிப்பாயும் தயார் நிலையோடு. தொய்வு கொண்டு துவண்டு விடும் கூட்டமல்ல நாம்.வெற்றி பெறாமல் ஓய மாட்டோம் என கோபத்தின் ரூபமாக கோடிக்கால் பூதமாக கூடித்திரெண்டெழுவோம்.               

ஒன்றுபட்ட  ஆவேசம் அதுவே நமது மூலதனம். 

வெற்றி விலகிப் போக ஒருபோதும் விடமாட்டோம்‌. 

வீறுடன் காத்திருப்போம் களமிறங்க.

இறுதி வெற்றி நமதே!




No comments:

Post a Comment