Sunday, February 17, 2019

அத்தியவாசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம்(ESMA),  BSNL ஊழியர்கள் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் இறங்கினால் பயன்படுத்தப் படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது . இந்த எச்சரிக்கையே  நமது போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.


தபால், தந்தி, தொலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு, விமானம், ரயில், சாலை போக்குவரத்து போன்றவை அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் வருகின்றன.  


BSNL அத்தியாவசிய சேவை என்று இப்போது கூறும் மத்திய அரசு அதை பராமரித்த விதத்தை சற்றே எண்ணிப்பார்க்கவும்.
BSNL தொலைபேசி நிலையங்கள், டவர்களுக்கு மின்கட்டணம் செலுத்தாமல் மின் இனைப்புகள் துண்டிக்கப்பட்ட சேவை பாதித்த போது ESMA யார் மீது பாய்ந்திருக்க வேண்டும்.


தனியார்களுக்கு 4G அலைக்கற்றை அள்ளி வழங்கிய மத்திய அரசு, BSNL நிறுவனத்திற்கு 4G வழங்காமல் முடமாக்கியதே, அதற்கு யார் மீது பாய்ந்தது ESMA.


TRAI , Telecom Disputes Settlement & Appellate Tribunal (TDSAT). போன்ற அமைப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக நிலை எடுத்து, அத்தியாவசிய சேவை அளித்து வரும் BSNL ஜ முடமாக்கியதே அப்போது யார் மீது பாய்ந்தது ESMA.


போதிய நிதி ஒதுக்காமல் BSNL இடம் உள்ள உபகரணங்களை பராமரிக்க இயலவில்லை. டீசல் வாங்க பணம் இல்லை.. ஒப்பந்த ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம் வழங்கப்படவில்லை.இதனால் முடங்கும் சேவைக்கு யார் காரணம். யார் மீது பாய்ந்தது ESMA.


1. 15 சதவீத ஊதிய பலன்களுடன் மூன்றாவது சம்பள மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்


2. பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் முன்மொழிவின் படி bsnl க்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.


3. பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்களுக்கு 1 1 2017 முதல்  ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்


4 அரசு விதிகளின்படி மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும்.


5 இரண்டாவது ஊதிய மாற்றகுழுவின் விடுபட்ட பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்


6. பிஎஸ்என்எல் ன் நில மேலாண்மை கொள்கைக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.


7 பிஎஸ்என்எல்  சொத்துக்களை மாற்றி கொடுப்பதை விரைந்து முடிக்க வேண்டும்.


8  வங்கிக் கடன் பெறுவதற்கு தேவையான  லெட்டர் of comfort ஜ வழங்க வேண்டும்.


9 பிஎஸ்என்எல் டவர்களை பராமரிக்க அவுட்சோர்சிங் கைவிட வேண்டும்.


போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தேச நலன் காக்கும் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ஜ  காப்பாற்றும் தேசபக்த போராட்டத்தை முறியடிக்க எஸ்மா சட்டத்தை பயன்படுத்துவேன் என்று மத்திய அரசு எச்சரிப்பது    கேள்விக்கு உரியதாகும்.


அடக்குமுறைகளை எதிர்த்து போராடுவோம், அரசு நமக்கும் நாட்டுக்கும் இழைக்கும் அநீதியை அம்பலப்படுத்துவோம்.  
தேசத்தின் உயிர் துடிப்பாக விளங்கும்  BSNL காக்கும் போராட்டத்தில் சமரசம் ஏதுமில்லை.


போராடுவோம்!
வெற்றி பெறுவோம்!
இறுதி வெற்றி நமதே!


அ. செம்மல் அமுதம்




No comments:

Post a Comment