Thursday, August 16, 2018

NFTE - BSNL
கோவை மாவட்ட சங்கம்
மாவட்ட செயற்குழு கூட்டம்  


நமது NFTE BSNL கோவை மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் கோவை பீளமேடு தொலைபேசி நிலையத்தில் ஆகஸ்டு 16ம் தேதி நடைபெற்றது. காலை 1000 மணியளவில் தோழர் ராஜேந்திரன் (ஒய்வு) கொடியேற்றி வைக்க கோரிக்கை முழக்கத்துடன் செயற்குழு துவங்கியது. தோழர் பாலசுப்பிரமணியன் ADS தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். தோழர் கருணாநிதி பீளமேடு  கிளைச்செயலர் வரவேற்புரை நல்கினார். தோழர்கள் சிவக்குமார் AVP, தோழர் N ராமகிருஷ்ணன் மாவட்டத் தலைவர், தோழர் அந்தோணி AVP ஆகியோர் தலைமைக்குழுவில் வழி நடத்த, தோழர் ராபர்டஸ் மாவட்டச் செயலர் செயற்குழுவின் ஆய்படுபொருளை முன்வைத்து துவக்கவுரையாற்றினார். தனது துவக்க உரையில் மாவட்டசெயலர்கள் கூட்ட முடிவுகள், கோவையில் மாநில செயற்குழு, மாவட்ட சங்க செயல்பாடுகள், 26 புதிய உறுப்பினர்கள் NFTE யில் இனைந்தது, கிளை மாநாடுகள, போன்ற பல்வேறு செய்திகளை முன்வைத்து உரையாற்றினார்.  தோழர் L சுப்பராயன் மாநிலப் பொருளார் சம்பள மாற்றத்தில் மாநிலச் சங்கம் அமைத்த 9 பேர் குழு தயாரித்து முன்வைத்த வரைவு அறிக்கை குறித்து உரையாற்றினார்.
தோழர் செம்மல் அமுதம் சம்மேளன சிறப்பு அழைப்பாளர் நமது மத்திய சங்கத்தின் முன்முயற்சியில் , TEPU, SEWA BSNL, FNTO சம்மேளனங்களை உள்ளடக்கி ஒன்றுபட்டு வரைவு(Draft Scale) அறிக்கை உருவாக்கியது.  BSNLEU சங்கத்துடன் இணைந்து ஒன்றுபட்ட கோரிக்கை முன்வைக்க சில பல மாற்றங்களுடன் நிர்வாகத்தின் முன்வைக்கப்பட்ட Scaleகள் குறித்து விளக்கினார்.
       மாநிலச்செயலர் தோழர் நடராஜன் தனது சிறப்புரையில டெல்லியில் கலந்து கொண்ட சம்பளக்குழு கூட்ட முடிவுகள், சம்பளமாற்றம் அடைய இன்னும் நாம் செல்ல வேண்டிய பாதை,  போராட்டங்கள், 2019 உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல், சென்னையில் நடைபெற்ற Opinion Leaders கூட்ட முடிவுகள், ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினை, ஆட்பற்றாக்குரை,  குறித்து விரிவாக உரையாற்றினார. இறுதியில் கோவையில் நடைபெறவுள்ள மாநில செயற்குழு வை ஒட்டி வெளியிட உள்ள மலர் விளம்பர படிவத்தை வெளியிட்டார்..
முன்னாள் சம்மேளன செயலர் தோழர் S S கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
        உணவு இடைவேளைக்குப் பின்னர் அமைப்புநிலை , நிதிநிலை, மாநில செயற்குழு நடத்திட திட்டம்,  மலர் விளம்பரம் சேகரிப்பு, குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. ஒரு சில கிளைகள் தவிர பெரும்பான்மையான மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைச்  செயலர்கள் கலந்து கொண்டு விவாதங்களில் பங்கேற்றனர்.
இறுதியில் தோழர் ராபர்டஸ், தோழர் நடராஜன் உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு பிரச்சினைகள்  குறித்து விளக்கம் அளித்தனர்.

மாலை 0600 மணியளவில் முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் மறைவு செய்தி வந்தவுடன் அன்னாருக்கு மெளன அஞ்சலியுடன  செயற்குழு நிறைவுற்றது.





  















No comments:

Post a Comment