இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏஐடியுசி-இன் 19ஆவது மாநில மாநாடு தொரப்பாடியில் உள்ள அழகாம்பாள் திருமண மண்டபத்தில் 23/01/2019 புதன்கிழமை தொடங்கியது.
இம்மாநாடு தொடர்ந்து மூன்று தினங்களுக்கு நடைபெறுகிறது. தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.21 ஆயிரத்துக்கும் குறையாத அளவில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கவும், ரூ.6 ஆயிரத்துக்கு குறையாத ஓய்வூதியம் வழங்கவும், தொழிலாளர் நலச் சட்டங்களை மத்திய அரசு சீர்குலைப்பதைத் தவிர்க்கவும், உடலுழைப்பு, கட்டுமானத் தொழிலாளர் நல வாரியங்களை இயங்கச் செய்யவும் வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டின் முதல் நாளான புதன்கிழமை மாலையில் பேரணி நடைபெற்றது. வேலூர் நேஷனல் ரவுண்டாணா பகுதியில் இருந்து அண்ணா கலையரங்கம் வரை நடைபெற்ற பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக, பெரியார் திடல் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநாட்டு வரவேற்புக்குழு சிறப்புத் தலைவர் ஏ.சி.சாமிக்கண்ணு தலைமை வகித்தார். ஏஐடியுசி அகில இந்திய பொதுச் செயலர் அமர்ஜீத் கௌர் சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலர் டி.எம்.மூர்த்தி உள்பட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்..
இரண்டாம் நாளான இன்று 24/01/2018 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மாநாடு துவங்கி நடை பெற்று வருகிறது. தமிழக ஏஐடியுசி தலைவர் கே.சுப்பராயன் இதற்குத் தலைமை வகித்தார். தொழிற்சங்க முன்னோடிகளின் உருவப்படங்களை மூத்த தலைவரான ஆர்.நல்லகண்ணு திறந்து வைத்தார்.
வரவேற்புக் குழு தலைவர் சி.ஜி.ராஜாராம் வரவேற்றார். AITUC பொதுச்செயலாளர் தோழியர் அமர்ஜீத் கௌர் தொடக்க உரையாற்றினார். பின்னர், அறிக்கை மீது விவாதம் நடைபெற்றது.
நமது #NFTE_BSNL தொழிற்சங்கத்தின் சார்பில் பங்கேற்று நமது சங்கத்தின் தலைவர் தோழர் RK அவர்களும், தமிழ் மாநில செயலர் தோழர் நடராஜன் அவர்களும் உரையாற்றினர்.
மாநாட்டில் நமது NFTE BSNL தலைவர்கள் தோழர் RK, தோழர் காமராஜ், தோழர் நடராஜன், தோழர் சேது உள்ளிட்ட பலரும் AITUC பொதுச்செயலாளர் தோழியர் அமர்ஜீத் கௌர் அவர்களை சந்தித்து நமது துறை சார்ந்த தொழிலாளர் கோரிக்கைகளை விளக்கினர். அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் சம்பள மாற்றப் பிரச்சினையில் உள்ள சிக்கல்களை Affordability Clause விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி இயக்கங்கள் நடத்திட AITUC முன்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment