Friday, January 4, 2019

அன்பார்ந்த  தோழனே,,
வருகின்ற சனவரி 8,9 #வேலை_நிறுத்த_போராட்ட__களத்தில் நீ கலந்து கொள்ளவில்லை எனில்
உன் எதிர்கால வாழ்க்கை போராட்ட களமாகிவிடும் என்பதை #மறந்து_விடாதே••
போராட்ட களத்தை வேடிக்கை பார்க்கும் வீணர்களாய் இருந்து விடாதே••
உன் எதிர் கால வாழ்க்கை வீணாய் போய் விடும் என்பதை #நினைவில்_கொள்••
உனக்காக போராடும் தோழனை ஏளனமாய் பார்க்காதே••
போராடுபவன் பெறும் வெற்றிக்கனி., போராடுபவனுக்கு இனிக்கும்
உனக்கு அந்த கனி கசக்கும்••
யாரோ போராடட்டும் என இருந்து விடாதே•|
போராடி வெற்றி பெற்றவனின் ஏளன பார்வை உன்னை  காலம் முழுவதும் கொள்ளும்..
அவர் சொன்னார்., இவர் சொன்னார்., என #வேலைக்கு_சென்று_விடாதே••
சொன்னவருக்கும் உனக்கு ஏற்படும் நிலை தான் என்பதை நினைவில் கொள்..
தொழிலாளர்களுக்கு எதிராக #மத்திய_அரசு கொண்டு வரும்
தொழிலாளர் விரோத சட்டங்கள்., மற்றும்
FTE, NEEM போன்ற சட்டங்களை படித்து தெரிந்து கொள்••
FTE சட்டத்தால் நிரந்தர பணிகள் என்று எதுவும் இருக்காது• அனைத்து பணிகளும் ஒப்பந்த அடிப்படையிலே நடைபெறும்.. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இனி மாத சம்பளம் என்பது கனவாய் போய்விடும்..
ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலிகள் ஆக்கப்படுவோம்•
 நாம் பெற்று வரும் அனைத்து சலுகைகள் மற்றும் CL,EL, சரண்டர் அனைத்தும் பறிக்கப்படும் என்பதை படித்து தெரிந்து கொள்..
NEEM என்ற சட்டத்தால் அனைத்து பணிகளுக்கும் வயது வரம்பு நிர்ணயிக்கப்படும்••
உதாரணம் களப்பணியில் உடல் உழைப்பு தொழிலாளிக்கு 40 வயதுக்கு மேல் வேலையில்லை••
40 வயதிற்கு மேல் கல்வி தகுதி இருந்தால் அடுத்த பதவி••
இல்லையேல் களப்பணியில் கடைசி பதவி என்பதை மறவாதே••
இரண்டு நாட்கள் சம்பளம் போய்விடுமோ என்று கவலை படாதே••
 இந்த சட்டங்களினால் ATM கார்டை நுழைத்தால் பணம் எப்ப வரும் ?  வருமா ? வராதா என்று கவலைபடும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை..
BSNL #தனியார்__மயமாக்கப்பட்டால் மக்கள் மத்தியில் உன் மவுசு காணாமல் போய்விடும்..
தனியார் நிறுவனங்களின் சலுகைகள் ஏதேனும் இருந்தால் அது தாராளமாக கிடைக்கும்••
இப்போது உள்ள சலுகைகள்.. பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள், பழைய பென்சன், புதிய பென்சன், எதுவும் கிடைக்காது••
ஏன் இவைகள் எல்லாம் பெற்று தரவில்லை என 200 ரூபாய் சந்தா கொடுத்த உரிமையில் தொழிற்சங்கங்களை எதிர்த்து நீ இனி கேள்வி கேட்க முடியாது..
தொழிலாளர் நல சட்டம் மாற்றப்பட்டால் தொழிற்சங்கங்களே இனி இருக்காது..
அப்போது யாரிடம் கேள்வி கேட்பாய் ?
உனக்காக,
உன் மனைவி மக்களுக்காக..
எதிர் கால சந்ததிக்காக..
உன் குழந்தைகளின் கல்விக்காக••
நீ வாங்கிய வீட்டு கடன்..
சொந்த கடனை கட்டுவதற்காக.. போராட்ட களத்திற்கு வா..
இன்று போல் என்றும் இருக்க வேண்டுமென நினைத்தால் போராட்ட களத்திற்கு வா.. சுயநலத்திற்காக, #அரசியலுக்காக.,
வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளாதே என்று சொல்லும் தலைவர்களை புறந்தள்ளி விட்டு வா களத்திற்கு..
இந்த ஒரு விசயத்தில் தொழிற்சங்க வித்தியாசம் பார்க்காமல் ஒன்று பட்டு போராடுவோம் வா களத்திற்கு••
இன்று போராடவில்லை எனில்.. இனி எதற்காகவும் போராட முடியாது.. ஏனெனில் #தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்கின்ற சட்டமும் இதில் அடக்கம்••
#இனியும்_ஏன்_தயக்கம் #வா_களத்திற்கு,
வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றியாக்குவோம்..
நம் முன்னோர் இரத்தம் சிந்தி, பல உயிர்கள் பலி கொடுத்து பெற்று தந்த உரிமை, சலுகைகளை பேணி காப்போம்••
நம் BSNL பொதுத்துறையா.. இல்லை தனியார் துறையா என்பது நிர்ணயிக்கும் சக்தி உன்னிடம் மட்டுமே உள்ளது••
நம் BSNL பொதுத்துறை நிறுவனமாக மக்கள் சேவையாற்றிட••  நாடு நலம் பெற நாமும் நலம் பெற சனவரி 8,9 இரண்டு நாட்கள் மட்டும் வேலைக்கு செல்லாதே••
#இவண்
உன்னில் ஒருவன்••

நன

No comments:

Post a Comment