தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு போராட்டக் களத்தில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகின்றனர். வழக்கம் போல் ஆளும் அரசு அடக்குமுறை ஆயுதங்களை கையில் எடுத்துள்ளது.
போராடும் தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆதரவாக NFTE BSNL , TMTCLU கோவை மாவட்ட சங்கங்கள் இணைந்து நடத்தும் ஆர்ப்பாட்டம் 29/01/2019 அன்று காலை 1000 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள CTO வில் நடைபெறும். அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்கவும்
ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கைகள்
ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கைகள்
- பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பின் பிரதான கோரிக்கையாக இருந்துவருகிறது.
2.2003ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊழியர் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பது ஜாக்டோ ஜியோ அமைப்பின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
3.சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
4.அரசு துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு வகைசெய்யும் அரசாணை 56-ஐ ரத்துசெய்யவேண்டும்.
5.இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்றும், முதுநிலை ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற்றுள்ளது.
6.மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி, 5 ஆயிரம் அரசுப் பள்ளிகளை மூடுவதை உடனடியாகக் கைவிட்டு, சமூக நீதியைப் பாதுகாத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7. 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனே வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8. 2003 மற்றும் பல்வேறு காலக்கட்டங்களில் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் பணிக்காலத்தினை, அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல், பணி வரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
9. அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி, வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி, புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப்பள்ளி ஆசியர்கள் பணிமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும்.
10. 3500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் கைவிட வேண்டும்
வாழ்த்துக்களுடன்
தோழமையுள்ள
A ராபர்ட்ஸ்
No comments:
Post a Comment