Friday, February 15, 2019

NFTE - BSNL
கோவை மாவட்ட சங்கம்
மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும்  
BSNL புத்தாக்கம் IIM இடைக்கால அறிக்கை கருத்தரங்கம்

NFTE BSNL கோவை மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் கோவை மெயின்  தொலைபேசி நிலையத்தில் பிப்ரவரி 12ம் தேதி .காலை 1000 மணியளவில் தோழர்  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கொடியேற்றி வைக்க கோரிக்கை முழக்கத்துடன் செயற்குழு துவங்கியது.. தோழர் பாலசுப்பிரமணியன் ADS தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்  தோழர் பாலகிருஷ்ணன் மெயின் கிளைச்செயலர் வரவேற்புரை நல்கினார். தோழர் N ராமகிருஷ்ணன் மாவட்டத் தலைமை தாங்கினார்.

.     மாநிலச்செயலர் தோழர் K நடராஜன்  செயற்குழுவை துவக்கிவைத்து உரையாற்றினார் , தனது உரையில்  ஹைதராபாத் மாநில செயலர்கள் கூட்ட முடிவுகளை விளக்கினார்.டிசம்பர் 3ம் தேதி முதல் நடைபெறவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் விலக்கி கொள்ளப்பட்ட சூழல், அதன் பின் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள், கோரிக்கையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாத சூழல், 18,19,20 பிப்ரவரி  மூன்று நாள் வேலைநிறுத்த போராட்ட கோரிக்கைகள் குறித்து விரிவாக எடுத்து உரைத்தார்.

BSNL புத்தாக்கம் IIM இடைக்கால அறிக்கை குறித்த கருத்தரங்கை தோழர் A  ராபர்ட்ஸ் மாவட்ட செயலாளர் துவக்கி வைத்து உரையாற்றினார், தோழர் A செம்மல் அமுதம் சம்மேளன சிறப்பு அழைப்பாளர், IIM  அகமதாபாத் இடைக்கால அறிக்கை குறித்தும் அதில் உள்ள VRS , ஒய்வு பெறும் வயதை 58 ஆக குறைத்தல், போன்ற தொழிலாளர் விரோத அம்சங்களை  எதிர்த்து நாம் போராட வேண்டிய அவசியத்தை விளக்கினார்.

அமைப்பு நிலை விவாதம், வேலை நிறுத்த விளக்க கூட்டம் மற்றும் பிரச்சார பயணம்  மாவட்டம் முழுதும் AUAB ன் கீழ் நடத்த திட்டம், 100% வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் என்ற முழக்கத்துடன்   தோழர் அய்யாசாமி கிளை செயலாளர் நன்றி நவில கூட்டம் நிறைவுற்றது.

     



       









  

No comments:

Post a Comment